குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!

Share

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், எனவே குழந்தைகளை வைத்தியசாலைக்கு அழைத்துவர பெற்றோர் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததை முன்னிலைப்படுத்தி சிலர் வைத்தியசாலை தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

குழந்தையின் சத்திரசிகிச்சை தொடர்பான அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. கிருமிகள் உட்சென்றதால் குழந்தை உயிரிழந்துள்ளது.

இருப்பினும், வைத்தியசாலையில் தினமும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன,

மேலும் குழந்தைகளுக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள், CT பரிசோதனைகள் மற்றும் இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குழந்தைகளுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...