இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை தாமதம்!!! வெளியான தகவல்!!
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை தாமதம்!!! வெளியான தகவல்!!

Share

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை தாமதம்!!! வெளியான தகவல்!!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ். காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் படகு சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட துறைமுகம் மாற்றப்பட்டதால், இந்த பயணிகள் கப்பல் சேவை தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயணிகள் கப்பல் சேவைக்காக, தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் வசதிகளை அதிகரிக்க இந்தியா மேலும் கால அவகாசத்தை கோரியுள்ளது.

இந்நிலையில் குறித்த சேவையில் தாமதம் ஏற்படலாம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...