வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இன்று சபையில் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” போர் உட்பட மேலும் பல காரணங்களால் வடக்கு, கிழக்கில் சுமார் ஒரு லட்சம்வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன.
அக்குடும்பங்களுக்கு வாழ்வாதார வழிகள் இல்லை. கொரோனா தொற்று நெருக்கடியால் நாளாந்த வருமானம் பெறுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு செய்திருந்தாலும் அவற்றை வாங்குவதற்கு சாதாரண மக்களிடம் பணம் இல்லை.
எனவே, இந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஏதாவது உதவித் திட்டங்களை நிதி அமைச்சர் வழங்க வேண்டும்.” – என்றார்.
#SrilankaNews