எதிர்வரும் காலங்களில் உலர் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டிய நிர்பந்தம் நாட்டில் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவி திட்டங்களை வழங்கி வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
பஞ்சத்தில் இருந்து நாட்டை எப்படி மீட்கலாம் என்பது குறித்தும்கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளன. தற்போதைய நிலையைப் பார்க்கும் போது, ஆபத்தான ஒரு காலம் எதிர்காலத்தில் வரும் என்பதை அறியக்கூடியதாக இருகின்றது. இலங்கைக்கு சொந்தமான தங்கத்தினை விற்பனை செய்துள்ளனர்.
அதேநேரத்தில் களவுகளை எடுத்ததாக கூறி, சில நிறுவனங்களின் முதலாளிகளை கைது செய்கின்றனர். இப்படி பல்வேறுபட்ட சூழல்களால் நிலைமை மோசமாகும் நிலை வரலாம்.
அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணத்தில் அரசில் இருந்து கொண்டே அரசை விமரச்சித்துக்கொண்டே இருக்கிறார்.
ஆனால், அரசாங்கத்தினை விட்டு வெளியே வந்து, அரசை விமர்சித்தால் நாங்கள் அவர்களது கருத்துக்களை ஏற்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews

