298905681 6324484230912453 4653387050744406275 n
இலங்கைசெய்திகள்

ஜெனரேட்டரில் கோளாறு! – மின்வெட்டு 3 மணித்தியாலமாக அதிகரிப்பு

Share

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாம் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் திருத்தப்படும் வரை யுகதனவி மற்றும் ஏனைய எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தெரிவித்துள்ளார்.

இரண்டாம் அலகில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மூன்றாம் கட்டப் பணிகள் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முதலாம் அலகில் திருத்தவேலைகள் முடியுவரை நாளாந்த மின்வெட்டு மூன்று மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய மின்வெட்டு 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு இருக்கும். நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் முதலாம் அலகின் பழுது காரணமாக அதனை திருத்தம் செய்வதற்கு 14 -16 நாட்கள் தேவைப்படுவதால் நாளை முதல் மின் வெட்டு நீடிக்கப்படும். இதற்கான அனுமதி கிடைத்தவுடன் மின்வெட்டு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...