தந்தை செல்வா நினைவு நாள் அனுஷ்டிப்பு!

தந்தை செல்வா நினைவு தினமான கடந்த 26 .04.2022 ஆம் திகதி புதன்கிழமை தந்தை செல்வா நினைவிடத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர்த் தொகுதி கிளையின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாரும் நல்லூர்த் தொகுதிக் கிளையின் செயலாளருமான பொ.கனகசபாபதி மற்றும் கிளை உறுப்பினர்கள் மலர் தூபி அஞசலி செலுத்தினர்.

அத்துடன், மாவிட்டபுர கந்தசுவாமி ஆலயத்தில் தந்தை செல்வாவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டதுடன், அவர்களுடன் ஆலயக் குருக்களும் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

thanthai selva 2

#SriLankaNews

Exit mobile version