யாழில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு..!
தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அளவெட்டி மற்றும் மாவிட்டபுரத்தில் வடக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் நெசவு ஆலைகளில் தொழில் வாய்ப்புள்ளது என்றும், அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் தெல்லிப்பழைப் பிரதேசசெயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியாளர்களாக இணைந்து, தொழில் முயற்சியாளர்களாக மாறமுடியும். முதல் ஆறு மாத காலம் முழுமை யான பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சிக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 200 ரூபா ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என்று பிரதேசசபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிறைவில் சிறந்த நாளாந்த வருமானம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். தொழில்வாய்ப்பைத் தேடுவோர் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயற்சியில் இணைந்து கொள்ளமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#srilankaNews
Leave a comment