களுத்துறையில் வீட்டிலிருந்து தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு!

சடலங்களாக மீட்பு e1653968897379

வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு – ஹினட்டியன்கல பகுதியில் நேற்றிரவு இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்த தாயாரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலங்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை வீட்டிலிருந்த கதிரையிலும், மகள் வீட்டு வரவேற்பறையிலும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

69 வயதான தந்தையும், 33 வயதான அவரது மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் களுத்துறை – நாகொட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் கொலையா என்பது தொடர்பில் இதுவரை கூற முடியாதுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version