பஞ்சத்தால் நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதி கிரியை நேற்று (27) இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக அரசாங்கம் கூறினாலும், அதனைச் செய்வதற்குத் தவறியுள்ளது.
நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படுவதோடு, கொள்ளை சம்பவங்களும் அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment