மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி கருத்தப்பாலத்துக்கு அருகே காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
செங்கலடி – கொடுவாமடு காளி கோயில் வீதியைச் சேர்ந்த 63 வயதான குஞ்சித்தம்பி காலிக்குட்டி என்பவரே யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை செங்கலடி கருத்தப்பாலத்துக்கருகே மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு காவலுக்குச் செல்லும்போதே அவரை காட்டு யானை தாக்கியுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் தொடர்ச்சியாக, இப்பிரதேசத்தில் இடம்பெறும் காட்டு யானை அட்டகாசத்துக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
#SrilankaNews
.
Leave a comment