அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவருக்கு கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்த நிலையில் சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரைக் கண்டால் பயம் போன்ற நிலை உருவாகியுள்ளது.
இதனால் அவர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
நாய் கடித்தமைக்கான உரிய தடுப்பூசி பெறாமையால் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளார் என மரண விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அவரைக் கடித்த வளர்ப்பு நாய் மறுநாளே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment