கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சியில் நேற்றைய தினம் (21) இளம் குடும்பத் தலைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இயக்கச்சி பகுதியில் A9 வீதியிலுள்ள கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட தனியார் ஒருவரின் காணியிலிருந்தே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இனங்காணப்பட்டுள்ளார்.
கரந்தாய் பளையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் எனும் நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .
நேற்று (20) மதியம் 12 மணியளவில் வீட்டிலிருந்து சென்றுள்ள இவர் நேற்று மாலை 4 மணியளவில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார் .
Leave a comment