அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்தவுக்கு ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, இராப்போசன விருந்து ஒன்றை வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுசில் பிரேமஜயந்தவுக்கு கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த இராப்போசனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இராப்போசன நிகழ்வின் போது முக்கியமான அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெற்றதாகவும், சில அரசியல் தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை சுசில் பிரேமஜயந்த மாத்திரமல்லாது நிமல் லங்சாவும் கடந்த வாரங்களில் அரசாங்கத்தை விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews