மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை!
கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதும் நாட்டில் நாளாந்தம் 2000 – 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, நூற்றுக்கும் அதிகமான மரணங்களும் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கிறது.
இந்த அறிகுறி நாடு இன்னும் அபாய நிலைமையில் காணப்படுவதை தெளிவாகக் காட்டுகிறது.
எனவே கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது.
எதிர்வரும் சில நாகளுக்கும் இதேபோன்று நூற்றுக்கும் அதிக மரணங்கள் பதிவாகும் நிலைமையே காணப்படும்.
ஆகவே ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு திறக்கப்பட்டால் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து விலகக்கூடாது என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்
Leave a comment