இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முகாமைத்துவ பீடத்தின் திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் அடுத்த வாரம்!

Share
jaffna univercity
Share

முகாமைத்துவ பீடத்தின் திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் அடுத்த வாரம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகளை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி, புதன்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, முகாமைத்துவம் மற்றும் வணிகம் ஆகிய கற்கை நெறிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளன.

திருநெல்வேலி கிழக்கு – கலாசாலை வீதியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள், வணிக பீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்கள் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குத் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறாத மாணவர்கள் மற்றும் மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் www.maco.jfn.ac.lk என்ற இணையத்தளத்தில் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், 2021/2022 கல்வியாண்டுக்காகப் பதிவு செய்த சகல மாணவர்களையும் இந் நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளுமாறும் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

20 5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில்...

17 4
இலங்கைசெய்திகள்

யாழில் முதலில் அவருக்கு கால் வைக்க முடியுமா! கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்

அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்ற நபர் முதலில் தனக்கு கால் வைக்க...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...