tamilni 72 scaled
இலங்கைசெய்திகள்

பெண் செய்த மோசமான செயல்

Share

பெண் செய்த மோசமான செயல்

கம்பஹாவில் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலம் ஆப்பிள் கையடக்க தொலைபேசி வாங்க வந்த இளம்பெண் ஒருவர் அதை சோதனை செய்வதாக கூறி அதனை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் உடுகம்பலை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கு விரிவுரைகள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆப்பிள் கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

முறைப்பாட்டாளர் தனது கையடக்க தொலைபேசியை விற்க பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்த குறித்த பெண் அதனை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கம்பஹாவிலுள்ள தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் கிளைக்கு அதனை கொள்வனவு செய்வதற்காக நேற்று முன்தினம் வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...