மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட அரச ஆதரவு அரசியல்வாதிகளில் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரின் பிரதான காரியாலயம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதுடன், ஆவணங்கள், உடமைகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன.
அதையடுத்து மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச ஆதரவு அரசியல்வாதிகளின் இல்லங்கள் மற்றும் அவர்களின் அலுவலகங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் சோதனையிடப்படுவதுடன் ஊரடங்கு நடைமுறையை மீறிவரும் வாகனங்கள் திருப்பியனுப்பப்படும் நிலையும் காணப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment