இரண்டு பில்லியனுக்கும் அதிகமான வருடாந்த இலாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு 25% மேலதிக வரி அறவிடுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு நேற்றுமுன்தினம் (07) வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 1 – 2020 இல் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டைப் பொறுத்தமட்டில் இந்த வரி விதிக்கப்படும்.
இந்த வரிகள் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருமானச் சட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களில் ஓய்வூதிய நிதி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை நிதி ஆகியவை அடங்கும்.
இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவிக்கையில், இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து 65 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்படும்.
உழைக்கும் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு இவ்வாறு வரி விதிப்பது கேவலமான செயல் என்றும் அவர் கூறினார்.
#SriLankaNews
Leave a comment