இலங்கையில் தற்போது தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment