A young india
இலங்கைசெய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை நீடிப்பு

Share

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் தற்போதைய வயதெல்லையை அதிகரிக்க தயாரிக்கப்பட்ட சட்டவரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க சட்டவரைபு ஒன்று தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி தயாரிக்கப்பட்ட சட்டவரைபு பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆடைக் கைத்தொழிற்றுறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் விடங்கள் பற்றி ஆராயும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுவில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைய முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்தில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயதாக நீடிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்று பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கு இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கி இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதில் திருத்த சட்டவரைபை நாடாளுமன்றில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...