கொழும்பு துறைமுகத்துக்கு சில மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் எக்ஸ்-பிரஸ் பேர்ள் எண்ணெய் கப்பல், தீ விபத்து காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டாவது இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் எண்ணெய் கப்பலிருந்து சேதங்களை மீட்கும் பணி மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக இலங்கைக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக கிடைத்துள்ளது.
இரண்டாம் கட்டத்திற்கான மொத்த இழப்பீடு 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். முதல் தவணையாக 02.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அந் நிறுவனம் இணக்கம் தெரிவித்த போதிலும், இலங்கைக்கு இதுவரை நட்டஈடு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுரவிடம் வினவியது போது,
கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்தது.
இதனால் நாட்டின் கடல்பரப்புக்கு ஏற்பட்டுள்ள சேதம் மிகப்பெரியது என தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment