எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து! – மாதிரிகள் வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு!
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் சுற்றுச்சூழல் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
விபத்தையடுத்து கப்பலில் இருந்து கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடல் மாதிரிகளையும் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தன என சந்தேகிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள், வெளிநாட்டு இரசாயன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment