கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் இன்று (10) காலை கரையொதுங்கியுள்ளது.
இச்சடலத்தில் தலை அற்றுக் காணப்பட்டதுடன் உடல் முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment