அத்துமீறி மீன்பிடிப்பு! – 12 இந்திய மீனவர்கள் கைது

20220403 090756

இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version