சேவையை ஆரம்பிக்கும் ஐரோப்பிய நிறுவனங்கள்

airport 1

ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக விமான நிறுவனமான அஸூர் எயார் மற்றும் பிரான்சின் எயார் பிரான்ஸ், இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸூர் எயார் இன்று(03) முதல் இலங்கைக்கான விமானங்களைத் முன்னெடுக்கும் அதேவேளையில் எயார் பிரான்ஸ் நாளை(04) முதல் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான சுவிஸ் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ், எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மே 2023 வரை வாராந்திர விமானங்களுடன் மீண்டும் இலங்கைக்கான தமது சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இந்த பருவ காலத்தில் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version