அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 500 கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ள நிலையில் அதனை உடன் விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாளர் நாயகம் மற்றும் சுங்க பணிப்பாளர் ஆகியோருக்கு பிரதமர் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இவ்வாறு விடுவிக்கின்ற அத்தியாவசிய பொருட்களை துரித கதியில் சதொச மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் ஊடாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டொலருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் இந்தப் பொருள்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கும் பொறுப்பு வர்த்தக அமைச்சு மற்றும் விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஏற்க வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
Leave a comment