9 10
இலங்கைசெய்திகள்

பாரிய அளவில் அதிகரித்த உணவுப் பொருட்களின் விலை – வலுக்கும் கண்டனங்கள்

Share

பாரிய அளவில் அதிகரித்த உணவுப் பொருட்களின் விலை – வலுக்கும் கண்டனங்கள்

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்ட குரல்கள் எழுந்துள்ளன.

அதற்கான தீர்வை அரசாங்கம் இதுவரையில் வழங்க தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறித்த விடயத்தை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே (Ranjith Withanage) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த அரசாங்கங்களின் பெரும் திருடர்கள் பிடிபடுவார்கள் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் இதுவரை பெரும் திருடர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரிசி மாபியாவை ஜனாதிபதி தனது பேச்சின் மூலமும் செயற்பாடுகளாலும் நிரூபிக்க வேண்டும்.

இது தொடர்பில் இந்நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகை காலத்தை அடிப்படையாக வைத்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி, தரமற்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வகையில், சில மோசடி விற்பனையாளர்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான கடைகளில் கொழும்பு மாநகர சபையினால் விசேட பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அங்கு சட்டத்தை மீறிய 11 பேர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...