நாட்டில் தற்போது கறுப்பு பூஞ்சை நோயும் கொவிட் தொற்றாளர்கள் இடையே பரவி வருகின்றது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பூஞ்சை தொற்று தொடர்பான விசேட வைத்தியர் ப்ரிமாலி ஜயசேகர நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு மேலதிகமாக ‘எஸ்பகிலோசிஸ்’ என்ற பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 700 கொவிட் தொற்றாளார்கள் தற்போது நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் அசோசியேடட் பெல்மனரி எஸ்பகிலோசிஸ் என்ற இந்த நோய் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் பரவி வருகின்றது.
நாட்டில், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள் இதுவரை 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment