நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலைமை தொடருமானால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை உருவாகும் எனவும், எனவே, மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் 64 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் தற்போது சிகிச்சைப்பெறுகின்றனர். மேலும் 104 நோயாளர்களுக்கு ஒட்சீசன் வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
நாட்டில் நேற்று 715 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment