நாடு திரும்பின் பாதுகாப்பு உறுதி – நாமல்

Namal

நாடு திரும்பின் பாதுகாப்பு உறுதி – நாமல்

யுத்த காலத்தில் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று  மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்கிறோம் என விளையாட்டுத்தறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ச தனது ருவிற்றர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு மீள வருகைதரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் இலங்கை அகதிகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்களை வரவேற்கிறோம் என்றும் அவர் மேலும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version