721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

Share

சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் வாக்கெடுப்புக் கோரியிருந்தார்.

இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குழுநிலை அமர்வின்போது சட்டமூலத்தில் திருத்தங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன், மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கொவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையாக 2022 வரவுசெலவுத்திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

வருடமொன்றில் கூட்டுமொத்தம் நூற்றியிருபது மில்லியன் ரூபாவை விஞ்சிய இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை விநியோகஸ்தர் மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும். இந்த வரியினால் எதிர்பார்க்கப்பட்டுள்ள வருடாந்த வருமானம் 140 பில்லியனாகும்.

சட்டமூலம் 2022 யூன் 21ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டதுடன், அப்போதைய நிதியமைச்சரினால் 2022ஆம் யூலை 06ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும்,...

04 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த...

03
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்: தமிழக அரசின் குரல் என்றும் ஒலிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நலனைப் பேணுவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை...

02
செய்திகள்உலகம்

2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு...