நானாட்டான், மடு மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் உயர் மட்டக் குழுவினர் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் நீர்வரத்து பிரதான ஆற்றுப்பகுதிக்குச் சென்று இன்று பார்வையிட்டனர்.
பாதுகாப்பு குறித்தும் அவதானம் செலுத்தியிருந்தனர்.
இதேவேளை அனுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக மல்வத்து ஓயா நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மன்னார் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. இதனையடுத்து அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதினால் மடு, நானாட்டான், முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment