நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 31 ஆம் திகதி இரவோடு இரவாக குறித்த விடயம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து இன்று காலை 10 மணி முதல் சட்டவரைபு தொடர்பான விவாதம் சபையில் இடம்பெற்ற நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இவ் வாக்கெடுப்பின்போது அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும்,எதிராக 51 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டு 81 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டவரைபு நிறைவேற்றப்பட்டுள்ளது,
இதனைத் தொடர்ந்து நாட்டில் தற்போது அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
Leave a comment