மின்வெட்டு என மக்களை அச்சுறுத்தி மின்சார கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
முதலில் இலங்கை மின்சார சபை தனது குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நிலக்கரி கொள்வனவு செய்ததில் முரண்பாடுகள் இருந்ததை எரிசக்தி அமைச்சின் செயலாளரும், டெண்டர் குழுவின் தலைவரும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் கூட்டத்தின் போது ஒப்புக்கொண்டதாகவிம் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
டீசல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிக கட்டணத்தை செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபை நிர்ப்பந்திக்கப்பட்டால், மாதாந்தம் 180 மற்றும் 300 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் பாவனையாளர்களே அத்தகைய செலவுகளை ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கட்டண உயர்வு சராசரி மக்களுக்கு மேலும் சுமையாக இருக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment