போராட்டத்தில் குதிக்கும் மின்சார ஊழியர்: அரசிற்கு கடும் எச்சரிக்கை

tamilni 25

மின்சார சபை ஊழியர்கள் மூன்று நாள் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03.01.2024) முதல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உத்தேச சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ளுமாறு மின்துறை அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சபையை ரணிலுடன் சேர்ந்து விற்க கஞ்சன விஜயசேகர விரும்புகிறார். இதை நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றினால் இலங்கை மின்சார சபையில் பாரிய வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

எனவே, இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு மாபெரும் போராட்டம் நடத்த ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.

கஞ்சன விஜயசேகரவுக்கு பகிரங்க சவால் விடுகிறோம் என தெரிவித்துள்ளார். முடிந்தால் இதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வாருங்கள்.

அன்றைய தினம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரையும் கொழும்புக்கு வரவழைப்போம் வரவழைப்போம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Exit mobile version