தவணை முறையில் மின் கட்டணம்!
நாட்டில் மின்சார பாவனையாளர்களுக்கு சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை 24 மாதங்களில் தவணை முறையில்செலுத்த முடியும். எனினும் இதன்போது மேலதிக பணத்தை வட்டியாக செலுத்த வேண்டியேற்படும்.
மின்சார விநியோகத்துக்கான கட்டணமாக இலங்கை மின்சார சபைக்கு கிடைக்க வேண்டிய சுமார் 44 பில்லியன் ரூபா, இன்னமும் கிடைக்கப் பெறாதுள்ளது எனவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே அண்மையில் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
Leave a comment