உள்ளாட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. எனினும், நாடாளுமன்றத்தை அதன் பதவி காலம் முடிவடைவதற்குள் கலைப்பதில்லை என்ற முடிவில் ஆளுந்தரப்பு உள்ளது.
இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதிலும் தாமதம் ஏற்படும். எனவேதான், முதலில் உள்ளாட்சி சபைத் தேர்தலையும், அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
Leave a comment