தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கார் மீது மேற்கொள்ளப்பட்ட முட்டைத் தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவத்தை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மிக உயர்ந்தது.
மக்கள் போராட்டம் நடத்த தனி இடம் கூட ஜனாதிபதி அமைத்துள்ளார். இன்று எமது அரசாங்கத்தின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது – என்றார்.
#SriLankaNews
Leave a comment