பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசம் வைத்துள்ள குறுகியகால வேலைத் திட்டம் என்ன என்பதை அவர் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நெருக்கடிகளுக்கு தீர்வு எனும் தொனிப்பொருளில் காலியில் நடைபெற்ற விசேட கருத்தரங்கின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமைச்சுக்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு மக்களுக்கு அதன் மூலம் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகின்றார்.
#SriLankaNews
Leave a comment