12 18
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு: வெளிச்சத்துக்கு வரும் வெளிவராத உண்மைகள்

Share

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு: வெளிச்சத்துக்கு வரும் வெளிவராத உண்மைகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களை கொன்றது புலிகளின் செயல் என்று காட்ட முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களையும் கொலை செய்தது, புலிகளின் செயல் என்று காட்ட, கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்த ஆடையொன்றை வைத்துவிட்டு, அவரின் கைது தொடர்பில் விசேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, காவல்துறை உத்தியோகத்தர்களின் படுகொலை மற்றும் துப்பாக்கி கடத்தல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறை உத்தியோகத்தர்கள் மீதும் சில உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறை பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் காவல்துறை மா அதிபர்களாக கடமையாற்றிய பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...