24 6694d5860f3b9
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி உள்ளிட்ட தரப்புக்கு உயர் நீதிமன்றம் காலக்கெடு

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி உள்ளிட்ட தரப்புக்கு உயர் நீதிமன்றம் காலக்கெடு\

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்களுக்காக நட்டஈடாக வழங்கப்படவுள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பணத்தை செலுத்தாவிட்டால், அந்த நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

எஞ்சிய தொகையை செலுத்த ஆறு வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரியுள்ளார்

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...