அரசியல்இலங்கைசெய்திகள்

சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்!

Share
rtjy 212 scaled
Share

சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியனை நோக்கி கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த இரா சாணக்கியன், திரிப்பொலி பிளட்டூன் இராணுவப்படைபிரிவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் பிள்ளையான் ஒரு கொலையாளி எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட பிள்ளையான் சாணக்கியனை நோக்கி, ”பைத்தியக்காரன்” என்றும் ”பைத்தியக்காரனுக்கு நேரம் கொடுத்தால் இவ்வாறு தான் பேசுவான்” எனவும் ”போடா” என்றும் கடுமையான வார்த்தைகளை கொண்டு உருவக்கேலி செய்தும் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக சர்வதேச தரப்பிலும், இலங்கையின் சட்டமூலங்களிலும் ஒரு தனி நபரை விமர்சிப்பது பொதுத்தன்மையின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட ஒன்றாக காணப்படுகிறது.

எனினும் நேற்றைய தினம் சாணக்கியன் தொடர்பில் பிள்ளையான் தெரிவித்த விடயங்களானது பொதுமக்கள் தரப்பில் விமர்சனத்தத்துக்கு உள்ளாகி வருகிறது.

எனினும் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் தெரிவித்த கருத்துக்களை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்களோ, அல்லது எதிர் தரப்பு உறுப்பினர்களோ நிலையியற் கட்டளை சட்டத்தின் அடிப்படையில் நீக்குவதற்கான வலியுறுத்தலை முன்வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நிலையியற் கட்டளை விடயத்தை முன்வைக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடானது அனைவரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

எனினும் பிள்ளையான் தெரிவித்த விடயமானது தற்போது வரை நாடாளுமன்றின் ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்கப்படாமல் ஆவணப்படுத்தப்பட்டு காணப்படுகிறது.

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

குறிப்பாக வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் உள்ளடக்கியவர்களாக காணப்படுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் பிள்ளையானினுடைய இந்த கருத்தானது கிழக்கு மாகாணங்களை சார்ந்த புத்திஜீவிகளையும், கல்வியியலாளர்களையும் வாக்களித்த மக்களையும் பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழர்களின் பண்பாடுகளின் அடிப்படையில் தனி ஒருவரை ஒரு போதும் உருவக்கேலி செய்யாத சூழ்நிலையில், பிள்ளையானின் இந்த செயற்பாடானது பலத்த விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மற்றும் புத்திஜீவிகளையும் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது, மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரின் இச் செயற்பாடானது மட்டக்களப்பு மண்ணிற்கு பெரும் இழுக்கு என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் நாடாளுமனற உறுப்பினர் பிள்ளையான் ஊடகவியலாளர்களை விமர்சித்தமையும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி ”போடா” என்ற வார்த்தையை உபயோகித்தமையும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...