download 2 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழின் மிகப்பெரும் தீமையாக போதைப்பொருள் பாவனை!

Share

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் இருக்கின்ற ஒரு பெரிய தீமையாக வளர்ந்து வருகின்றது. அதனை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மறை மாவட்ட குழு முதல்வர் ஜெபரட்டினம் அடிகளார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்த போதைப் பொருள் பாவனையால் அன்றாடம் எத்தனையோ இளைஞர் யுவதிகள் பாடசாலை மாணவ மாணவிகள் இதற்கு அடிமையாவதை கேள்விப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்

பலர் தற்கொலை செய்கின்றார்கள் பலர் நோய் வாய்ப்படுகின்றார்கள். குடும்பங்களிலே பிரச்சனை பெற்றோர்கள் கவலையோடு இருக்கின்றார்கள்

ஆனபடியால் இந் நிலை வரவர மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூட இது பற்றி சொல்லியிருந்தார். கடந்த வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காக இந்த போதைப்பொருள் பாவனை அதிகரித்து இருக்கின்றது

ஆகவே இதனை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. நாங்கள் எல்லாருமாக இணைந்து இதற்கு எதிராக போராட வேண்டும். எங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும்.

இது ஒரு சிலர் மட்டும் செய்கின்ற ஒரு வேலையாக இருந்தால் அது முடியாது. அனைவரும் இணைந்து அதாவது மதத் தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் எல்லாரும் ஒன்றிணைந்து நாங்கள் இதற்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தினை நடாத்தி எங்களுடைய சந்ததியை பாதுகாக்க வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

அதனை யாரும் தட்டுக்களிக்காமல் இதனை செய்ய முடியாது என்று அதனை விட்டு விடாது. இது கட்டாயமாக எங்களால் செய்ய முடியும். அனைவரும் ஒன்றிணைந்து இந்த பெரும் தீமையில் இருந்து எங்களுடைய எதிர்கால சந்ததியினை காப்பாற்ற முன்வர வேண்டும் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...