காங்கேசன்துறை பொலிஸாரால் இளம்பெண் ஒருவர் (வயது-19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மல்லாகத்தை சேர்ந்த குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண்ணின் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கணவன் – மனைவி இருவரும் மல்லாகம் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். அங்கிருந்து வெளியேறிய அவர்கள் தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் தங்கியிருகின்றனர் என அறிந்த பொலிஸார் அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பல நாள்களாக சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment