நாட்டில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
டொலரின் பெறுமதி அதிகரிப்புக்கு ஏற்ற வகையில், மருந்துப் பொருட்களின் விலையில் திருத்தம் கொண்டுவரப்படும். விரைவில் இந்தியாவின் உதவியுடன் கடன் அடிப்படையில் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்.
தற்போது இருப்பில் உள்ள மருந்துகள் தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. நாட்டில் மரித்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை – என்றார்.
#SriLankaNews