tamilnih 15 scaled
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை

Share

காலியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பயங்கர சம்பவம் நேற்று (02) காலி – இக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஜயலத் குமாரசிறி என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வைத்து அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர், மேற்படி நபரின் தலையையும், இரண்டு கைகளையும், கால் ஒன்றையும் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், கொலைச் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
El Nino
இலங்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

தற்போது நிலவும் வெப்பநிலைமையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு...

Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...