தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள சுமார் 6 இலட்சம் பேருக்கு எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இன்று தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து அட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் 10 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் பெறப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘சிப்’ கொண்ட 5 இலட்சம் பழைய வகை அட்டைகளும் கியூஆர் குறியீடு கொண்ட 5 இலட்சம் புதிய அனுமதிப்பத்திர அட்டைகளும் கிடைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment