விமர்சனங்களுக்கு உள்ளான திராவிட முன்னேற்றக்கழகத் தொண்டர்கள்

24 6662895e25b9c

விமர்சனங்களுக்கு உள்ளான திராவிட முன்னேற்றக்கழகத் தொண்டர்கள்

தமிழ் நாட்டில் பாரதிய ஜனதாக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் தோல்வியை திராவிட முன்னேற்றக்கழகத் (DMK) தொண்டர்கள் கொண்டாடிய விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோயம்புத்தூரில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார்.

இதனையடுத்து இதனை மகிழ்ச்சியாக கொண்டாடிய திராவிட முன்னேற்றக்கழகத் தொண்டர் வீதியில் வைத்து ஆடு ஒன்றை பகிரங்கமாக வெட்டிக் கொலை செய்து அதனை அண்ணாமலை பழிஆடு என்று கோசமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டாட வேண்டுமானால். ஆட்டை கொலை செய்து, அதனை கொண்டாட வேண்டாம் என்றும், தம்மை பழிதீர்த்துக் கொள்ளுமாறும் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version