douglas devananda
இலங்கைசெய்திகள்

எல்லைதாண்டும் மீனவர்களுக்கு டக்ளஸ் எச்சரிக்கை!

Share

“இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” – என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

“வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. எனவே, எமது கடல் வளத்தை பாதுகாக்க கடற்படையுடன் இணைந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலென்பது இன்று நேற்று நடைபெறும் விடயமல்ல, நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றது. இதனை தடுப்பதற்கு இலங்கை கடற்படையினர் தேவையான நடவடிக்கை எடுத்துவருகின்றனர். நேற்றுகூட அத்துமீறிய 12 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை தொடரும்.” – எனவும் அமைச்சர் டக்ளஸ் உறுதியளித்தார்.

அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...