tamilnaadi 82 scaled
இலங்கைசெய்திகள்

அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள்: கஜேந்திரகுமாருக்கு அழைப்பு

Share

அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள்: கஜேந்திரகுமாருக்கு அழைப்பு

உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது என்றும் தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,

” நான் பலமுறை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்நாடு சென்று தமிழக தலைவர்களுடன் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் பேசுவோம் என அழைப்பு விடுத்தேன். சிலர் அதனை மறுக்கின்றனர்.” என்றார்

இதன் போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், ”நீங்கள் துறைசார்ந்த அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களால் பிரச்சினை தீர்க்க முடியாது என்றால் எங்களை ஏன் அழைக்கிறார்கள். உங்களால் கையாள முடியாது என்றால் ஏன் அமைச்சராக இருக்கிறீர்கள் பதவியை துறவுங்கள்” என்றார்.

இதன் போது பதில் அளித்த டக்ளஸ் , ”இந்த பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல இந்தப் பிரச்சினையை ஒருவர் கையாள முடியாது. இராஜதந்திர ரீதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கையாள வேண்டும்.

நான் பதவி விலகுவதால் குறித்த பிரச்சினை தீரப்போவதக எனக்கு தெரியவில்லை. உங்கள் பாட்டனர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என நினைக்கிறேன்.” என்றார்.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...